மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பிரச்சனைகளில் இருந்து மூழ்கி விடாமல் உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக ஒரு நல்ல பலனை இறுதியில் பெறலாம். அதிகப்படியான பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணவரவு கூடும். உடன்பிறப்பு, மற்றும் பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவை கிடைக்க பெறுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். புது வண்டி, வாகனங்களை வாங்க முயற்சி செய்வீர்கள். புது சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோக இடத்தில் உங்களால் சரியாக முடிவெடுக்க முடியாது.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் பல கிளைகளை உருவாக்குவீர்கள். தொழில் ரீதியாக சற்று கவலை நிறைந்ததாக இருக்கும். சந்திராஷ்டமம் : 27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
( For Mithunam : Daily - Weekly - Yearly )
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com